செம டிவிஸ்ட்...கமல் இல்லாமல் நடந்த முதல் எலிமினேஷன்! வெளியேறிய நபரை அறிவித்த ரம்யா கிருஷ்ணன்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறியுள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.
நாமினேஷனில் பிரியங்கா, இமான், நிரூப், பாவனி, தாமரை, ஐக்கி பெரி ஆகிய 6 பேர் நாமினேட் ஆகி இருந்தனர்.
இவர்களில் யார் நாமினேட் செய்யப்படுவார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இந்த நிலையில் இந்த வாரம் ஐக்கி பெரி வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடிற்கான ஷுட்டிங் வியாழக்கிழமையே முடிக்கப்பட்டு விடும். இந்த நிலையில் இந்த தகவல் லீக்காகியுள்ளது. கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதால் அவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில் கமலுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தற்காலிக தொகுப்பாளராக களமிறங்கி இருக்கிறார். இதுவே நடிகர் கமல் இல்லாமல் முதல் முறையாக நடக்கும் எலிமினேஷன்.
ரம்யா கிருஷ்ணன் ஐக்கி வெளியேறுவதை அறிவித்து விட்டதாகவும் இன்னும் சில வாரங்கள் அவரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற தகவலும் கிடைக்க பெற்றுள்ளது. இதேவேளை, நாளைய எபிசோட்டை பார்த்தால் எல்லாம் தெரிந்து விடும்.
இதேவேளை, இன்றைய நிகழ்ச்சியின் 2ஆவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதில் பேச தொடங்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன், எல்லாரும் நிறைய பேரை கெஸ் பண்ணிக்கொண்டிருந்தீர்கள் என்கிறார்.
தொடர்ந்து பேசும் ரம்யா கிருஷ்ணன், கண்ணிவெடி தெரியுமா? கண்ணி வெடி என்று கேட்கிறார்.
மேலும் அண்ணாச்சி ஊறுகாய் பாட்டீல் என்ன ஆச்சு என தனது ஸ்டைலில் வேலையை தொடங்கியுள்ளார். இந்த வாரம் பள்ளிக்கூட டாஸ்க்கில் நடந்த பிரச்சனைகள் மற்றும் ட்ரூத் ஆர் டேர் டாஸ்க்கில் ஏற்பட்ட பிரச்சனைகள் என ஏகப்பட்ட கன்டென்ட் உள்ளது.
இவை எல்லாவற்றையும் நடிகை ரம்யா கிருஷ்ணன் விளாசி தீர்ப்பாரா அல்லது பட்டும் படாமல் இருப்பாரா என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.
