Bigg Boss 10: யாரும் எதிர்பாராத எவிக்ஷன்... ரம்யா கிருஷ்ணன் கொடுத்த ஷாக்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியுள்ள நிலையில் இன்று எலிமினேட் ஆகியுள்ள போட்டியாளர் குறித்து கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து பல சுவாரசியங்கள் அரங்கேறிவரும் நிலையில், இந்த வாரம் விஜய் சேதுபதிக்கு பதிலாக ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்குகின்றார்.
கடந்த நாட்களில் நடைபெற்ற டாஸ்க் மக்களிடையே பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரம்யா கிருஷ்ணன் நேற்றைய தினம் சரமாரியாக பேசியுள்ளார்.

இந்நிலையில் இன்று வெளியேறும் போட்டியாளர் குறித்து பயங்கர எதிர்பார்ப்பு இருந்துள்ளது. அஸ்மிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஷமா வெளியேறுவதாக ரம்யா கிருஷ்ணன் காட்டியுள்ளார். ஏற்கனவே ஷமாவிடம் .ப்ரீ பாஸை பயன்படுத்த போறீங்களா என்று கேட்டதற்கு இல்லையென்று பதில் அளித்தார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |