அமித்தின் மகளின் பாடலால் வியந்து போன பிக்பாஸ் வீடு! படு வைரலாகும் காணொளி
பிக்பாஸ் போட்டியாளர் அமித் பார்கவ்வின் மகள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றபோது பாடிய முத்தமழை பாடல் காணொளி இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் சுவாரஸ்யமான மனநிலை உருவாகியுள்ளது.

இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களை திருப்பதிப்படுத்தும் வகையில் இருக்கவில்லை என்பது அனைவரும் அறிந்தது தான்.
ஆனால், இந்த வாரத்தில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்து செல்வதால் நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஒரே கலகலப்பாகவும் எமோஷனலாகவும் இருப்பதால், பிக்பாஸ் ரசிகர்களும் ஆர்வமாக பார்த்துவருகின்றார்கள்.

இந்நிலையில், போட்டியாளர் அமித் பார்கவ்-இன் மனைவி மற்றும் மகள் ஆகியோர் வீட்டிற்குள் சென்றனர்.
அப்போது அமித்தின் மனைவி சிவரஞ்சனி தெரிவித்த சில அறிவுரைகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அமித்தின் மகள் பாடிய முத்த மழை பாடல் இணையத்தில் வைராலாகி வருவதுடன் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் குவித்துவருகின்றது.
சிவரஞ்சனி மற்றும் அமித் என இருவரும் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் தான். இந்த சீசனில் அமித் வைல்ட் கார்டு போட்டியாளராக களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |