பிக்பாஸ் சீசன் 5 எப்போது தொடங்குகிறது? வெளியான தகவலால் குஷியில் மக்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றது. மக்களின் பெரும் ஆதரவுடன் நான்கு சீசன்களை முடித்த பிரபல ரிவி தற்போது ஐந்தாவது சீசனை தொடங்க இருக்கின்றது.
பிக்பாஸ் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசில் முகேன் ராவ், நான்காவது சீசனில் ஆரி என டைட்டில் வின்னராக மக்கள் தேர்ந்தெடுத்தனர்.
கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தினால் திட்டமிட்டபடி ஜுன் மாதம் தொடங்காமல் காலதாமதமாகவே தொடங்கியது.
இந்நிலையில் இந்த ஆண்டில் கமல் அல்லது சிம்பு தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், கமல் தான் தொகுத்து வழங்குவார் என்று உறுதியான தகவல் வெளியாகியது.
தற்போது பிரபல ரிவி போட்டியாளர்களை எல்லாம் தெரிவு செய்துவிட்டநிலையில், இந்த வருடமும் அக்டோபரில் தொடங்கி ஜனவரி மாதம் முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.