Bigg Boss: ஸ்டார் ஹோட்டலுக்கு வர்றவங்க இனிமையா பேசுவாங்களா? ஆர்ஜே ஆனந்தியை அழ வைத்த முத்து
பிக் பாஸ் வீடு ஹோட்டலாக மாறியுள்ள நிலையில், இன்று ஹோட்டல் ஊழியராக பணியாற்றிய ஆனந்தியை முத்துக்குமரன் கேள்வி கேட்டு அழ வைத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பிக் பாஸ் வீடு நட்சத்திர ஹோட்டலாக மாறியுள்ளது.
இந்த நட்சத்திர ஹோட்டலில் இன்று சரியாக விளையாடாத ஆண், பெண் போட்டியாளர்கள் ஹோட்டலை நடத்துபவராகவும் இருந்தனர்.
இதில் முத்துக்குமரன் விருந்தினராக இருந்த நிலையில், இவரிடம் ஆர்ஜே ஆனந்தி எவ்வாறு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேசியுள்ளார்.
இதற்கு முத்துக்குமரன் ஸ்டார் ஹோட்டலுக்கு வருபவர்கள் இனிமையாக மட்டும் தான் பேசுவார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளிக்க முடியாத ஆனந்தி அழுதுகொண்டு எழுந்து போயுள்ளார். அவரை ஜாக்குலின் சமாதானப்படுத்துகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |