வெளியில் வந்தவுடன் கட்சி மாறிய ரவீனா: வெளியிட்ட முதல் பதிவு
91 நாட்களாக பிக்பாஸ் வீட்டில் சுற்றித்திரிந்த ரவீனா வெளியேறிய பின்னர் உருக்கமான பதிவொன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 13 வாரங்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா, ரவீனா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன்,விக்ரம், மாயா , விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா, மணிசந்திரா, வினுஷா, யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் ஆகிய உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதுவரையில் இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
அதிலும் கடந்த வாரம் நடந்த டவுள் எவிக்ஷனில் ரவீனா மற்றும் நிக்சன் வெளியேற்றப்பட்டனர்.
வெளியேறிய பின்னர் அவர் மீதுள்ள அனைத்தை சர்ச்சைகளுக்கும் பதிலடிக் கொடுக்கும் வகையில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அதை நான் மனசார ஏத்துக்குறேன்..
அதாவது, மணி - ரவீனா ஆகிய இருவரும் ஜோடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சுற்றித்திரிவது குடும்பத்தினர் உட்பட ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட சென்ற இடத்தில் இவர்களின் காதல் லீலைகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது.
இவையனைத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, “ முதலாவது நான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது எனக்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னால் முடிந்தவரை இந்த 91 நாட்கள் உங்கள் அனைவரையும் நான் மகிழ்வித்தேன் என்று நம்புகிறேன். இந்த நிகழ்ச்சி குறித்து அனுபவத்தை ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இது வாழ்க்கையில் மாற்றம் ஒரு அனுபவமாக தான் எனக்கு இருந்தது” என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றதுடன், ரவீனாவின் இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |