தலைகீழாக நின்ற பிக்பாஸ் ரம்யா: பேரதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி
பிக் பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் வெளியிட்டு இருக்கும் தலைகீழாக நின்று செய்யும் ஏரியல் யோகா வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். தமிழில் டம்மி பட்டாசு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் ரம்யா. பின்னர், ராஜூமுருகனின் ‘ஜோக்கர்’ படத்தில் நடித்தார். சமூக பிரச்சனைகளை மையமாக கொண்ட அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருப்பார் ரம்யா. பின்னர் சமுத்திரகனிக்கு ஜோடியாக ‘ஆண் தேவதை’ திரைப்படத்தில் நடித்தார்.
அதன்பிறகு ரம்யாவுக்கு பெரிதாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ரம்யா மொட்டைமாடியில் போட்டோஷூட் நடத்தி, அதனை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
இதன் மூலம், ரம்யாவுக்கு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவரானர் ரம்யா. பின்னர் அதே விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு இடையில் ரம்யாவுக்கு, விஜய் டிவியின் மிகப் பெரிய ஹிட் ஷோவான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு வந்தது. நிகழ்ச்சியில் அவர் இறுதி போட்டி வரை வந்து நான்காம் இடத்தைப் பிடித்தார்.
தற்போது ரம்யா தலைகீழாக யோகா செய்யும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். ஏரியல் யோகா எனப்படும் இந்த வகை யோகாவை, இவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சகப்போட்டியாளாராக கலந்துக் கொண்ட ஷிவானியும் செய்துள்ளார். யோகா செய்வதில் ஷிவானியை மிஞ்சும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ளார் ரம்யா. இந்த வீடியோவை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.