பிக் பாஸிலிருந்து வெளியேறிய ராகவ்... தற்போது உடல்நிலை எப்படி இருக்கு?
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராகவ் உடல்நிலை தற்போது எவ்வாறு உள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ரகவ். இவர் சமீபத்தில் நிகழ்ச்சியினை விட்டு வெளியேறினார்.
ஏனெனில் இவர் விளையாடும் போது காலில் அடிபட்டுவிட்டதால், அதனை அறுவை சிகிச்சை செய்து சரிசெய்ய வேண்டியுள்ளது.
இதனால் பிக் பாஸ் வீட்டிலிருந்து மருத்துவர்களின் ஆலோசையின்படி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியேறியவரின் உடல்நிலை எவ்வாறு உள்ளது என்ற கேள்வி பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது.
இந்நிலையில் ராகவ் காணொளி ஒன்றினை வெளியிட்டு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தனது உடல்நிலை குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியது என்ன?
ராகவ் கூறுகையில் தனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு மிகவும் நன்றி என்று கூறியுள்ளார். தான் நன்றாக இருப்பதாக கூறியதுடன், இப்போது அறுவை சிகிச்சை இன்னும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
காரணம் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த மறுநாளே அவரது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆதலால் அம்மாவின் உடல்நிலையை கவனித்து வரும் இவர் இன்னும் அறுவை சிகிச்சை செய்யவில்லையாம்.

மனைவி கூறியது என்ன?
ராகவ்வின் மனைவி பிரீத்தா கூறுகையில், தற்போது இன்னும் அறுவை சிிகிச்சை செய்யாமல் தான் இருக்கின்றார். அவருக்காக பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் நன்றி.
தானும் தற்போது வெளிநாட்டில் இருப்பது மிகவும் கஷ்டமாக இருப்பதாக கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |