திடீரென்று சூப்பர் சிங்கரில் இருந்து பிரியங்காவை தூக்கிய விஜய் டிவி
திடீரென்று சூப்பர் சிங்கரில் இருந்து பிரியங்காவை தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக மைனா நந்தினி மீண்டும் தொகுப்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
விஜய் டிவியில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது.
இதை மாகாபா, பிரியங்கா தான் பல வருடமாக தொகுத்து வழங்கி இருந்தார்கள்.
ஆனால், இந்த வருடம் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற உடன் இந்த நிகழ்ச்சியை மாகாபா உடன் சேர்ந்து மைனா நந்தினி தொகுத்து வழங்கியிருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்று மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.
இதனால் பிரியங்காவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். ஆனால், ஒரே வாரத்தில் மீண்டும் மைனா நந்தினியே மாற்றப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கு என்ன காரணம் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
