சாண்ட்ராவை அப்பவே Divorce பண்ண நினைத்தேன்! பிரஜன் ஓபன் டாக்
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரஜன் சமீபத்திய பேட்டியொன்றில், Sandra-வும் நானும் Divorce வரைக்கும் போய் இருக்கின்றோம் என்று கூறிய விடயம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் சீசன் 9
விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இன்னும் சில நாட்களில் இந்த நிகழ்ச்சி முடியவுள்ள நிலையில் யாரும் இதுவரை விளையாட்டை ஒழுங்காக விளையாடவில்லை என்று ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது ஒரு நிகழ்ச்சியா என்று கொந்தளித்து வந்த பிக்பாஸ் ரசிகர்கள், இந்த வார நிகழ்ச்சியை சற்று ஆர்வமான பார்த்து வருவதற்கு காரணம் இந்த வாரம் பிக்பாஸில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது.

இதுவரை, சாண்ட்ரா, கனி, கானா வினோத் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சென்றுள்ள நிலையில் பார்வதி - கம்ருதீன் குடும்பம் இந்த வாரத்தில் உள்ளே வரவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
பிரஜன்- சாண்ட்ரா
இந்த சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நட்சத்திர ஜோடி பிரஜன் சாண்ட்ரா நுழைந்தார்கள்.தற்போது சாண்ட்ரா பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றார் ஆனால் பிரஜன் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரு வாரங்களுக்கு முன்னரே வெளியேறியிருந்தார்.

இந்நிலையில் பிரஜன் சமீபத்திய பேட்டியொன்றில், Sandra-வும் நானும் Divorce வரைக்கும் போய் இருக்கின்றோம் என்று கூறியுள்ளார்.
குறித்த பேட்டியில் பிரஜன் குறிப்பிடுகையில், சாண்ட்ராவுக்கும் என் அம்மாவுக்கும் இடையில் ஆரம்பத்தில் ஒத்துப்போகவே இல்லை, ஒரு கட்டத்தில் இருவரையும் சேர்த்து வைக்கவே முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த பிரச்சினையில் சாண்ட்ரா மீது தவறே கிடையாது ஆனால் அழுத்தம் தாங்க முடியாமல் ஒரு முறை விவாகரத்து வரை சென்றிருக்கின்றோம். நல்ல வேலை அப்படி எதுவும் ஆகவில்லை. இல்லாவிட்டால் என் வாழ்வில் நான் விட்ட பெரிய பிழையாக அது மாறியிருக்கும்.

Divorce என்பதே கோபத்தில் எடுக்கும் முடிவு தான் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசினால் எல்லாம் சரியாகிவிடும் என வெளிப்படையாக பேசியிருக்கின்றார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |