Bigg Boss 10: அன்று வெளியேற்றப்பட்ட பிரதீப்... இன்று கெத்தாக வீட்டிற்குள் வந்த தருணம்
Bigg Boss Pradeep Entry: பிக்பாஸ் வீட்டிலிருந்து சக போட்டியாளர்களால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்ட பிரதீப் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் Family Round நடைபெற்றது. ஆரம்பத்தில் 19 போட்டியாளர்களுடன் செப்டம்பர் 6ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.
பின்பு வைல்டு கார்டு போட்டியாளர்கள் சிலர் வந்திருந்த நிலையில், தற்போது 80 நாட்களைக் கடந்து சென்ற நிகழ்ச்சியில் 8 போட்டியாளர்கள் உள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாக மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்தினர் மீண்டும் சண்டைபோட ஆரம்பித்துள்ளனர். கடந்த வாரம் ஷாதிகா, முகேஷ் இருவரும் வெளியேறினார்கள்.

இந்நிலையில் இன்று பிக்பாஸின் பழைய போட்டியாளர்களான சனம் ஷெட்டி, பிரதீப் உள்ளே வந்துள்ளனர். Mr & Mrs Office என்ற சீரிஸ் நடித்துக் கொண்டிருப்பதை ப்ரொமோஷன் செய்வதற்காக உள்ளே வந்துள்ளனர்.
பிக்பாஸ் போட்டியாளரான நடிகர் கவினின் நண்பர் தான் பிரதீப். பிரதீப் 2023ம் ஆண்டு பிக்பாஸ் 7வது சீசனில் கலந்து கொண்டிரு்ந்தார்.
ஆனால் சக போட்டியாளர்களுக்கு இடையூறாக இருந்ததாகவும், குறிப்பாக பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத மனநிலையில் இருப்பதாக குற்றம் சாட்டினர்.
பின்பு கன்பெஷன் அறையில் வைத்து அவரிடம் இந்த காரணத்தினைக் கூறி அங்கிருந்தவாரே வெளியேற்றினார். இந்நிலையில் தற்போது அதே வீட்டிற்குள் பிரதீப் சென்றுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |