விரைவில் திருமணம்.. ஒரு வழியாக நிச்சயதார்த்தத்தை முடித்த பிரதீப்- பொண்ணு இவர்தானா?
பிக்பாஸ் சீசன் 7 மூலம் பிரபலமான பிரதீப் ஆண்டனிக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதீப் ஆண்டனி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்டவர் தான் பிரதீப் ஆண்டனி.
இந்த நிகழ்ச்சியில் பிரதீப் மீது பெண்கள் இருக்கும் இடங்களில் மோசமாக நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கபட்டு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டை விசாரிக்காமல் பெண்களுக்கு ஆதரவு கொடுத்து ஆண்டவர் முடிவு எடுத்த காரணத்தினால் சமூக வலைத்தளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார்.
நிச்சயதார்த்த புகைப்படங்கள்
இந்த நிலையில், வெளியேறிய பின்னர் பிரதீப்பின் ஆதரவாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிரதீப், அன்று முதல் இன்று வரை என்ன செய்தாலும் அவை இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் பிரதீப் ஆண்டனிக்கு கடந்த தினங்களில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இதன்போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, “எனக்கெல்லாம் நடக்காது என்று நினைத்தேன். பரவாயில்லை என்னை நம்பி பொண்ணு கொடுத்துவிட்டார்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு பிரதீப் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |