பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய பொங்கல் கொண்டாட்டம்: அசத்தலான ப்ரொமோ காட்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொங்கல் பண்டியையை மிகவும் கோலாகலமாக போட்டியாளர்கள் கொண்டாடியதை இன்றைய முதல் ப்ரொமோ காட்சியாக பிரபல ரிவி வெளியிட்டுள்ளது.
வெளியேறிய சில போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து இந்த கொண்டாட்டத்தில் பங்கு பெற்றுள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார உடையான வேஷ்டி, சேலையினை ஆண் பெண் போட்டியாளர்கள் அணிந்துள்ளனர்.
பொங்கல் பானையில் பொங்கல் பொங்கிய நிலையில், போட்டியாளர்கள் பொங்கலோ பொங்கல் என்று மிகுந்த மகிழ்ச்சியோடு கூறியதோடு, பெரியவரான தாமரை அனைவருக்கும் விபூதி பூசி பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.