Bigg Boss: பாரு, கம்ருதினால் கிடைத்த தண்டனை... விஜய் சேதுபதியிடம் குற்றவாளியாக நிற்கப்போவது யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்றுள்ள நிலையில், அரோரா, கம்ருதின், பார்வதி இவர்களின் முக்கோண காதல் விசாரணைக்கு வந்துள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸில் பல சுவாரசியம் அரங்கேறியுள்ளது. மொத்தம் 24 போட்டியாளர்கள் உள்ளே சென்ற நிலையில், தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இந்த வாரம் பார்வதி, கம்ருதின் இருவரும் செய்த தவறுக்காக பிக்பாஸ் அனைவருக்கும் தண்டனை கொடுத்துள்ளார். அதாவது வீட்டிலுள்ள பால், காபி, டீ, முட்டை இவற்றினை எடுத்துச் சென்றுவிட்டனர்.

தற்போது மைக்கை மறைத்து வைத்து பேசியது பிக்பாஸ் நீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், இதனை விசாரித்து வருகின்றனர். சக போட்டியாளர்களின் ஆதங்கத்தினை பாரு, கம்ருதின் இருவரும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
மற்றொரு புறம் எப்ஃஜே கம்ருதின் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கம்ரு பயங்கரமாக பேசியுள்ளார். ஆதலால் இந்த வாரம் விஜய் சேதுபதியிடம் கம்ருதின் குற்றவாளியாக நிற்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |