Bigg Boss: பணப்பெட்டியை எடுக்க வெளியே சென்ற முத்து! கடும் அதிர்ச்சியில் போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்கில் முத்து முதல் ஆளாக சென்றுள்ள நிலையில், குறித்த நேரத்திற்குள் பணப்பெட்டியை எடுத்துவந்தாரா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்ச்சி இன்னும் 4 தினங்களில் முடிவடையும் நிலையில், கடைசியாக 6 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
தற்போது பழைய போட்டியாளர்களும் உள்ளே இருக்கும் நிலையில், பணப்பெட்டி டாஸ்க்கை பிக் பாஸ் அறிவித்துள்ளது.
இதில் பணப்பெட்டியை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுப்பவர்கள் விளையாட்டை மீண்டும் தொடரலாம் என்று புதிய அறிவிப்பை பிக் பாஸ் கொடுத்துள்ளது.
முதலில் 50 ஆயிரம் பணப்பெட்டி வந்துள்ள நிலையில், 30 மீட்டர் தூரத்தை 15 நொடிக்குள் சென்று பணப்பெட்டியை எடுத்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் முதல் நபராக முத்து சென்றுள்ள நிலையில், குறித்த நேரத்தில் பணப்பெட்டியை எடுத்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் முத்து தான் டைட்டில் வின்னராவதற்கு தற்போது முன்னணியில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |