பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீர் எவிக்ஷன்! இதுவரை இல்லாத புதிய திருப்பம்: நடுநடுங்கிய போட்டியாளர்கள்
பிக்பாஸ் வீட்டில் மிட் வீக் எவிக்ஷன் என்ற பெயரில் இன்று ஒரு நபர் எவிக்ஷன் செய்யப்படும் காட்சியினை ப்ரொமோவாக பிரபல ரிவி வெளியிட்டுள்ளது.
பிக்பாஸின் திடீர் திருப்பம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை கண்டிராத பல திருப்பங்கள் நடைபெற்று வருகின்றது. அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிய நிலையில் தற்போது அனைவருக்கும் பிக்பாஸ் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 4 போட்டியாளர்கள் இறுதியாக இருக்கின்றனர். பிக்பாஸ் இந்த ஆறாவது சீசனில் எதிர்பாராத பல திருப்பத்தினை கொடுத்துள்ளார்.
ஆம் எப்பொழுது பணப்பெட்டி ஒருமுறை மட்டுமே வரும். இந்த சீசனில் முதலில் பணம் மூட்டையாகவும், இரண்டாவது பணப்பெட்டியாகவும் இரண்டு முறை வந்துள்ளது.
முதல்முறை வந்த மூட்டையை கதிரவன் எடுத்து வெளியே சென்றார். இரண்டாவது வந்த பணப்பெட்டியை அமுதவாணன் எடுத்துக்கொண்டு வெளியேறியுள்ளார்.
கடைசியாக இருக்கும் 5 போட்டியாளர்கள் கிராண்ட் ஃபினாலே அன்றே எவிக்ட் செய்து வெளியே அழைத்து வருவார்கள். இந்த சீசனில் டாப் 3 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருப்பது தெரியவந்துள்ளது.
ஆம் மிட் வீக் எவிக்ஷன் என்ற பெயரில் இன்று ஒரு எவிக்ஷன் நடக்கவுள்ளதை பிரபல ரிவி ப்ரொமோவாக வெளியிட்டுள்ளது.