பிக்பாஸில் கமல் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அர்ஜுன், விஜய் சேதுபதி பின்னுக்கு தள்ளிய சீக்ரெட்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 தொகுத்து வழங்கும் கமலின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தற்போது பெரும்பாலான ரிவிகள் ரியாலிட்டி ஷோ மூலம் மக்களை பெரிதும் கவர்ந்து வருகின்றது. பிரபல முன்னணி நடிகர்களை வைத்து ரியாலிட்டு நிகழ்ச்சியினை பல ரிவிக்கள் தொகுத்து வழங்கி வருகின்றது.
ரியாலிட்டி ஷோவிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு என்பதால் சன் டிவி விஜய்சேதுபதியை வைத்தும், ஜீ தமிழ் நடிகர் அர்ஜுன் வைத்தும் நிகழ்ச்சிகளை வெளியிட்டு பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே, மாஸ்டர் செஃப் மற்றும் சர்வைவர் நிகழ்ச்சி ஆரம்பமாகி விட்ட நிலையில், அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து பிக்பாஸ் சீசன் 5 ஷோவை பிரபல ரிவி தொடங்கவுள்ளது.
குறித்த மூன்று நிகழ்ச்சிகளை கோலிவுட் முன்னணி நடிகர்கள் தொகுத்து வழங்கி வந்தாலும், சம்பளத்தில் விஜய்சேதுபதி, அர்ஜுர் இவர்களை ஓரம் கட்டி உலகநாயகன் கமலே உள்ளார்.
ஒரு நாள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் சம்பளமாக 4 கோடி வாங்க உள்ளாராம். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக 15 முதல் 20 நாட்கள் கால் ஷீட் கொடுத்துள்ளாராம்.
எனவே எப்படியும் கூட்டி கழித்து பார்த்தல், பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமல் சுமார் 60 கோடி வரை சம்பளமாக பெற உள்ளார்.
அடுத்து ஜீ தமிழ் டி.வி.ல டெலிகாஸ்ட் ஆகி வரும் சர்வைவர் நிகழ்ச்சிக்காக அர்ஜூனுக்கு மொத்தமாவே 5 கோடி தான் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.
இதே போன்று விஜய் சேதுபதிக்கு ஒரு எபிசோட்டுக்கு 50 லட்சம் பேசப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 15 கோடி ரூபாய் அக்ரிமெண்ட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.