விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் மீண்டும் விஜயை கலாய்த்த ஜுலி! (Video)
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் சொன்ன குட்டி கதையை விமர்சித்து பிக்பாஸ் ஜுலி வெயிட்ட காடிணொளி வைராலாகிய நிலையில், விஜய் ரசிகர்கள் பலரும் ஜூலியை கடுமையாக திட்டி காணொளிகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மீண்டும் What is this VIJAY Anna ? It’s very wrong VIJAY ANNA என பதிவிட்டு ஜுலி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் புதிய புயளை கிளப்பி வருகின்றது.

தவெக தலைவர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் விஜய், தனது கடைசி படமான ஜனநாயகம் படத்தினை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகினார்
தற்போது அரசியல் களத்தில் முழுமையாக இறங்கி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும், இதற்கு விசில் சின்னத்தையும் பெற்றுள்ளார்.

இதனால் இவரது கட்சிக்கூட்டம் ஒவ்வொரு ஊர்களிலும் போடப்பட்டு கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தை பார்த்து மற்ற அரசியல் கட்சிகளை சற்று மிரள வைத்துள்ளது.
மேலும், கரூரில் நடைபெற்ற கட்சி மாநாட்டின் போது 50 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்த நிலையில், விஜய்யின் அரசியல் பயணத்திற்கு இது மிகப்பெரிய கேள்விகுறியாக மாறியது.
இந்நிலையில் சமீபத்தில் வேலூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் விஜய் ஜல்லிக்கட்டு காளை குறித்து ஒரு குட்டி கதையினைக் கூறியுள்ளார். அவர் கூறிய குட்டி கதையால் கோபமடைந்த பிக்பாஸ் ஜுலி காணொளியினை வெளியிட்டு விஜயை விமர்சித்தார்.

அதாவது 50 பேர் இறந்தது 50 பேராக இருக்கட்டும் அண்ணே... 500 பேராக ஆக்கிடாத என்று விஜய்யை பேசியிருந்தார். ஜுலியின் இந்த காணொளிக்கு விஜய்யின் ரசிகர்கள், அவருக்கு எதிராக பல ட்ரோல்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜுலி மீண்டும் ஒரு காணொளியினை வெளியிட்டு What is this VIJAY Anna ? It’s very wrong VIJAY ANNA என விஜயை கலாய்க்கும் வகையில் பேசியுள்ளார்.
விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சை ஒரு புறம் இணையத்தில் புயலை கிளப்பிவரும் நிலையில், நடுவில் இந்த ஜூலி வேறு என ரசிகர்கள் மெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |