Bigg Boss 10: மேடையில் ஜேசனாக மாறி கொந்தளித்த ரம்யா கிருஷ்ணன்... குறும்படத்தால் பதிலடி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று விஜய் சேதுபதிக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் நிலையில், ஜேசனுக்கு சரமாரியான பதிலடி கொடுத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து பல சுவாரசியங்கள் அரங்கேறிவரும் நிலையில், இந்த வாரம் விஜய் சேதுபதிக்கு பதிலாக ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்குகின்றார்.
கடந்த நாட்களில் நடைபெற்ற டாஸ்க் மக்களிடையே பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரம்யா கிருஷ்ணனும் சரமாரியாக பேசியுள்ளார்.

முதலில் அவினாஷ் தலைவர் பதவியை விட்டு வெளியேறியது குறித்து பேசியுள்ளார். மற்றொரு ப்ரொமோ காட்சியில் ஜேசன், முனியம்மா பிரச்சனையை எடுத்துள்ளார்.
இதில் முனியம்மா மீது என்ன தவறு? என்பதை குறும்படம் போட்டு விளக்கியுள்ளார். மேலும் அத்தருணத்தில் ஜேசனாகவே ரம்யா கிருஷ்ணன் மாறி மேடையில் கொந்தளித்துள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |