Bigg Boss: ஜாக்குலின் கூறிய ஒற்றை வார்த்தை... கோபத்தில் கொந்தளித்த சவுந்தர்யா
பிக் பாஸ் வீடு ஹோட்டலாக மாறியுள்ள நிலையில், ஜாக்குலின் மற்றும் சவுந்தர்யா இருவரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பிக் பாஸ் வீடு நட்சத்திர ஹோட்டலாக மாறியுள்ளது.
இந்த நட்சத்திர ஹோட்டலில் இன்று ஆண்கள் அணியினர் ஹோட்டல் ஊழியர்களாகவும், பெண்கள் அணியினர் விருந்தினராகவும் இருந்து வருகின்றனர்.
மாடலாக ஹோட்டலுக்கு வந்துள்ள சவுந்தர்யா, சப்பாத்தி கேட்டு முத்துவிடம் பேசியுள்ளார். அப்பொழுது தான் சாப்பிடுவதே ஒரே ஒரு சப்பாத்தி தான்.. அதுவும் உப்பாக இருந்தால் நான் அவங்களை மாதிரி ஆகிவிடுவேன் என்று ஜாக்குலினைப் பார்த்து கூறியுள்ளார்.
இதனால் கோமடைந்த ஜாக்குலின் இனி இவ்வாறு பேசாதே என்று கூறி வார்த்தையை விட்டதால் சவுந்தர்யாவும் பதிலுக்கு சண்டை போட்டுள்ளார். இதுவரை எந்தவொரு சண்டையும் போடாத சவுந்தர்யா தற்போது தனது சுயரூபத்தைக் காட்டியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |