Bigg Boss: எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கிய பெற்றோர்... விஜய் சேதுபதியிடம் புலம்பிய ஜாக்குலின்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீட்டிற்குள் வந்த பெற்றோர்கள் கூறிய விடயத்தைக் குறித்து விஜய் சேதுபதி விசாரித்து வருகின்றார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.
நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ளதால் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகின்றனர்.
கடந்த வாரத்தில் ரஞ்சித் வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், தற்போது 12 போட்டியாளர்கள் பிக்பாஸில் விளையாடி வருகின்றனர்.
இதில் இந்த வாரத்திற்கு 7 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த நாட்களில் நடைபெற்ற ஃப்ரீஸ் டாஸ்கில் போட்டியாளர்களின் உறவினர்கள் உள்ளே வந்துள்ளனர்.
இதில் பெற்றோர்கள் தாங்கள் எதிர்பார்த்ததை கூறாமல் எதிர்பாராத விடயத்தைக் குறித்து கூறியுள்ளனர் என்று ஜாக்குலின் கூறியுள்ளார்.
ஜாக்குலின் மட்டுமின்றி முத்துக்குமரனும் இவ்வாறே கூறியுள்ளார். பெற்றோர்கள் வந்த சில அறிவுரை கூறியதால் போட்டியாளர்கள் சற்று கவனமாகவே விளையாடி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |