பெண் போட்டியாளரை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய ராபர்ட் மாஸ்டர்! ஜனனியின் காலில் விழுந்தது ஏன்?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ரிவி சேனல் டாஸ்க் நடைபெற்று வந்த நிலையில், பல சுவாரசியமான நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீடு ரிவி சேனலாக மாறியுள்ளது.
ரிவி சேனலுக்கு தேவையான அனைத்து நிகழ்ச்சிகளையும் போட்டியாளர்கள் சில வாக்குவாதங்களுடன் செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் அசல் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற இருப்பது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வருகின்றது.
தற்போது நடைபெற்று வந்த ரிவி சேனலில் சீரியல் ஒன்று அரங்கேறியுள்ளது. விக்ரமன் மற்றும் அவருக்கு அம்மாவாக ரக்ஷிதா நடித்துள்ளார். ராபர்ட் மாஸ்டருக்கு மகள்களாக ஷெரினா, ஆயிஷா, குயின்ஸி, ஜனனி நடித்துள்ளனர்.
இதில் ஷெரின் விக்ரமன் இருவரும் காதலிக்கும் நிலையில், இரண்டு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் ராபர்ட் மாஸ்டர் தனது தங்கையை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார். இதில் கீழே விழும் தருணத்தில் விக்ரமன் வந்து அவரைப் பிடித்துவிடுகின்றார்.
இருவருக்கும் இடையே மீண்டும் ரொமான்ஸ் ஆரம்பமாகியுள்ளது. பின்பு தனது மற்றொரு மகள் குயின்ஸி வேறு ஒருவருடன் சென்றுவிட்டதால், தற்போது வந்துள்ள மாப்பிள்ளையை தான் திருமணம் செய்து கொள்வதாக ஜனனி வந்து நின்று தந்தையின் மானத்தைக் காப்பாற்றியுள்ளார். இதனால் விக்ரமன் ஜனனியின் காலில் விழுந்துள்ளார்.