Bigg Boss: அதிரடியாக உள்ளே வந்த கானா வினோத்... அரோராவிற்கு கொடுத்த சரியான பதிலடி
பிக்பாஸ் வீட்டிலிருந்து பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத் மீண்டும் உள்ளே வந்து அதிரடி காட்டியுள்ளார்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது இறுதி வாரத்தை நோக்கி சென்றுள்ளது. இந்த சீசனில் பரபரப்பாக பேசப்பட்ட விடயம் என்னவெனில் பாரு, கம்ருதின் ரெட் கார்டு விவகாரம் தான்.
பின்பு கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துச் சென்றது யாரும் எதிர்பாராத அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் இவர் தான் பிக்பாஸ் 9 டைட்டில் வின்னராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது கடைசியாக விக்ரம், சக்தி, திவ்யா, அரோரா என நான்கு பேர் உள்ளனர்.
பொங்கல் கொண்டாட்டத்திற்காக வெளியே சென்ற அனைத்து போட்டியாளர்களும் மீண்டும் உள்ளே வந்துள்ளனர். சமீபத்தில் வெளியேறிய கானா வினோத் தற்போது எண்ட்ரி கொடுத்துள்ளார்.
கானா வினோத் உள்ளே வந்ததும், அமித் பார்கவ் அவரைத் தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அனைத்து போட்டியாளர்களுக்கும் உச்சக்கட்ட மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துச் செல்வதற்கு உள்ளே இருக்கும் அரோரா தான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதற்கு கடந்த சனிக்கிழமை கானாவினோத் பதில் கொடுத்தாலும் அரோராவை பலரும் சத்தம் போட்டு வருகின்றனர்.
இதற்கான விளக்கத்தினை சமீபத்தில் காணொளி மூலம் வினோத் வெளியிட்டார். தற்போது அரோரா வந்து நான் தான் காரணமா நீ வெளியேறியதற்கு எல்லாரும் சத்தம் போடுறாங்க என்று கூறியுள்ளார். உடனே கானா வினோத் யார் கூறியது அதெல்லாம் கிடையாது... என்று சமாதானப்படுத்தியதோடு. ஒருவேளை 18 லட்சம் கிடைக்கலைனு அழுகிறியா என்று கலாய்த்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |