Bigg Boss: பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த கனி... விக்ரமை உதாசினப்படுத்துவது ஏன்?
பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த சீசனில் வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் உள்ளே வந்துள்ள நிலையில், இன்று கனி, எஃப்ஜே, ஆதிரை மூன்று பேர் உள்ளே வந்துள்ளனர்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த வாரத்தில் இரண்டு போட்டியாளர் வெளியேறினர்.
கானா வினோத் 18 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய நிலையில், சான்ட்ராவும் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினார்.

இந்நிலையில் இந்த சீசனில் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்களில் பலர் உள்ளே வந்துள்ளனர். இன்று கனி உள்ளே வந்துள்ளது அனைவருக்கும் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் அனைவரிடமும் நன்றாக பேசிய கனி, விக்ரமிடம் மட்டும் சரியாக பேசவில்லை... வந்தவுடன் கைகொடுத்துவிட்டு சென்றார்.
விக்ரம் தன் மீது கோபமா என்று கேட்டதற்கு இல்லை என்று பதில் அளித்துவிட்டு சட்டென சென்றுள்ளார். கனியின் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத விக்ரம் கவலையில் காணப்படுகின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |