பண மோசடியில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்... அம்பலமாகிய உண்மை
பிக் பாஸ் பிரபலமும் பிரபல சீரியல் நடிகருமான நடிகர் தினேஷை பணமோசடி புகாரின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
நடிகர் தினேஷ்
நடிகர் தினேஷ் பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் பிரபலமான நிலையில், இந்த சீரியலில் நடித்த நடிகை ரக்ஷிதாவைக் காதலித்து திருமணம் செய்தார்.
காதல் திருமணம் செய்த இந்த ஜோடிகள் திருமணமான சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றனர். இதில் ரக்ஷிதா பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டு விளையாடினார்.

பின்பு ஏழாவது சீசனில் தினேஷ் விளையாடி ரசிகர்களிடையே மீண்டும் பிரபலமானார். இந்நிலையில் இவர் பண மோசடி ஒன்றில் சிக்கியுள்ளதாக பொலிசார் கைது செய்துள்ளார்.
பணமோடியில் கைது
இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டையார்குளத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவரிடம், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2022ம் ஆண்டு நடிகர் தினேஷ் ரூ.3 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார்.
ஆனால் பணத்தை பெற்று்க் கொண்ட பின்பு அரசு வேலை எதுவும் வாங்கிதராமலும், பணத்தை திரும்ப கொடுக்காமலும் தன்னை ஏமாற்றியதாகவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி அவரை தினேஷ் தாக்கியதாகவும் தெரிவித்ததுடன், தினேஷ் மீது பொலிசில் புகாரும் அளித்துள்ளார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட பொலிசார் தினேஷை கைது செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர் தனது பக்கம் இருக்கும் நியாயத்தினை தற்போது கூறியுள்ளார்.

தினேஷ் கூறுவது என்ன?
தான் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணை மட்டும் மேற்கொண்டு தன்னை அனுப்பிவிட்டதாக கூறியுள்ளார்.
மேலும் இந்த வழக்கு திட்டமிட்டு தன் மீது சுமத்தப்பட்டதாகவும், கருணாநிதி என்ற நபர் யார் என்றே தனக்கு தெரியாது என்றும், தான் நேர்மையானவர் என்று கூறியுள்ளார்.
பிக் பாஸிலும், தனிப்பட்ட முறையிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள், எந்தவொரு விடயத்தை தான் நேர்மையாக எதிர்கொண்டு வருகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |