கையெடுத்து கும்பிட்டும் வெளியேறும் போட்டியாளர்கள்! வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகும் போட்டியாளர்களில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் வெகு நாளாக விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் முதலிடத்தை பிடிக்கிறது.
இதில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் சின்னத்திரையில் மற்றும் சமூக வலைத்தளங்கள் என எதாவதொரு வகையில் பிரபல்யமானவர்களாகவே காணப்படுவார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நாட்கள் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்களுக்கான சம்பளம்
இந்நிலையில் சுமார் 8 போட்டியாளர்கள் பாரிய தொகை சம்பளத்துடன் நாட்கள் அடிப்படையில் பெற்றுக் கொண்டுள்ளனர்.
கடந்த வாரம் குயின்சி எலிமினேட்டானதை தொடர்ந்து ஆயிஷா மற்றும் ராம் இருவரும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் ராமிற்கு அடுத்த வாரம் பிறந்த நாள் வருவதாகவும், இதனால் ராமையும் ஆயிஷாவையும் வெளியேற்றாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்க வைக்க வாக்களிக்குமாறும் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டனர்.
ஆனால் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், இதற்கு யாரும் மதிப்பளிக்கவில்லை.
கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
இந்த வாரம் டபுள் எவிக்ஷகில் இருவரும் சிக்கி வெளியேறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் “இவர்களின் பரிதாபத்திற்கு பிக் பாஸ் இடமில்லை” எனவும் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
#Ayesha and #Ram Requesting People to Vote#BiggBoss #BiggBossTamil#BiggBossTamil6 pic.twitter.com/88pLXkzZ2m
— BIGG BOX TROLL (@drkuttysiva) December 6, 2022