Bigg Boss: பிக்பாஸ் வீட்டிற்கு வரும் போட்டியாளர்களின் உறவினர்... 24 மணி நேரம் தங்கும் வாய்ப்பு! அதிரடி காட்டிய பிக்பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடைபெறாத அளவிற்கு புதிய அறிவிப்பு ஒன்றினை பிக்பாஸ் வெளியிட்டுள்ளது போட்டியாளர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் காணப்படுகின்றனர். இதில் விக்ரம், வினோத் இருவரையும் தவிர மற்ற 11 போட்டியாளர்கள் இந்த வார நாமினேஷனில் இருக்கின்றனர்.
இந்த வாரம் வீட்டின் தலைவராக வினோத் இருந்து வரும் நிலையில், பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றினைக் கொடுத்துள்ளார். அதாவது நேரத்தினை கணக்கிடும் டாஸ்க் ஆகும்.

மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டுள்ள போட்டியாளர்கள் எந்த அணிகள் வெற்றி பெறுகின்றதோ? அவர்கள் அடுத்த வார தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் மற்றொரு அதிரடியான அறிவிப்பு ஒன்றினையும் பிக்பாஸ் கொடுத்துள்ளார். வெற்றி பெறும் அணியில் இருக்கும் போட்டியாளர்களின் ஒருவரது குடும்பம் வீட்டிக்குள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்களாம்.
அதாவது 24 மணி நேரம் போட்டியாளர்கள் உடன் அவர்கள் சொந்தங்கள் இருக்கலாம் என அறிவித்துள்ளது. தற்போது கரகாட்டக்காரன் அணியினர் மதிப்பெண்களில் முன்னிலையில் இருக்கின்றனர்.
இந்த அணியில் திவ்யா, சாண்ட்ரா, அமித், வினோத் என நான்கு பேர் இருக்கின்றனர். இவர்கள் வெற்றிபெற்றால் சாண்ட்ரா தனது குடும்பத்துடன் 24 மணி நேரம் இருப்பார் என்று கூறப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |