பிக் பாஸ் சரவணன் எனது புருஷன்... பிக் பாஸ் அனன்யா கொடுத்த ஷாக்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் சிலர் அதே ரிவியில் அண்டா கா கஜம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன்பு முடிந்த நிலையில், இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் சிலர் புதிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
ஆம் அண்டா கா கஜம் என்ற நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்கள் விக்னேஷ், அனன்யா, விஷ்ணு, அக்ஷயா, ரவீனா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் தான் விசித்ராவும் கலந்து கொண்டார் என்றும், அவருக்கும் விக்னேஷ்க்கும் ஏற்பட்ட சண்டை காரணமாக படப்பிடிப்பிலிருந்து அதிரடியாக வெளியேறினார் என்று கூறப்பட்டது.
தற்போது இந்நிகழ்ச்சியினை மாகாபா தொகுத்து வழங்கும் நிலையில், வீட்டில் இருந்த சக போட்டியாளர்களை குறித்து ஒற்றை வார்த்தையில் பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதில் விக்னேஷிற்கு விசித்ரா குறித்து கேள்வி கேட்ட போது கெத்து என்று பதில் அளித்துள்ளார். அதுவே அனன்யாவிடம் சரவணன் குறித்து கேள்வி எழுப்பிய போது தனது புருஷன் என்று கூறியுள்ளார்.
அதாவது உள்ளே நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் அனன்யாவின் கணவராக சரவணம் விளையாடியதால் இவ்வாறு கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |