பிக்பாஸில் பெண் போட்டியாளரிடம் அசீம் கேட்ட அந்த பொருள்? முடியும் தருவாயில் எழும்பிய சர்ச்சை
பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் தருவாயில் உள்ள நிலையில், அசீம் குறித்த சர்ச்சையான கருத்து தற்போது வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளரை அறிவிக்கும் கிராண்ட் ஃபினாலே இன்று மாலை 6 மணிக்கு பிரபல ரிவியில் ஆரம்பமாக இருக்கின்றது.
இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளும், சுவாரசியமான நிகழ்வுகளும் அரங்கேறியது. இதில் இறுதி போட்டியாளர்களாக அசீம், விக்ரமன், ஷிவின் இவர்கள் இருக்கின்றனர்.
பிக்பாஸ் சீசன் 6ல் சர்ச்சைகள் என்று கூறினால், அசல் கோளாறு பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட விதம், கமல் வெளியிட்ட அதிகமான குறும்படம், விக்ரமன் பேசிய தமிழ்நாடு விவகாரம், அசீமிற்கு ரெட் கார்டு, பேக்கரி டாஸ்கில் தனலட்சுமியிடம் பறிக்கப்பட்ட வெற்றி, இறுதியாக விக்ரமனுக்கு ஆதரவாக திருமாவளவன் போட்ட டுவிட் என நடந்துள்ளது.
சுவாரசியமான நிகழ்வு என்றால், பொதுமக்களாக உள்ளே சென்ற தனலட்சுமி, ஷிவின், அதிகமுறை தலைவரான மணிகண்டன், இரண்டுமுறை பணப்பெட்டி, வைல்டு கார்டு இல்லாத சீசன், திருங்கையாக சாதனை படைத்த ஷிவின் என சுவாரசியங்கள் அரங்கேறியுள்ளது.
முடியும் தருவாயில் அசீம் குறித்த சர்ச்சை
இந்த பிக்பாஸ் சீசனில் அசீம் தனது வாயில் வந்த வார்த்தைகளை போட்டியாளர்களிடம் பேசியும், சண்டையிட்டும் இருந்தார். ஆனால் அதற்காக உடனே மன்னிப்பும் கேட்டு முதல் ஆளாக காப்பாற்றப்பட்டு வந்தார்.
தற்போது வெற்றியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்நிலையில், அசீம் விருந்தினராக உள்ளே வந்த ஷெரினிடம் காண்டம் கேட்டதாக சர்ச்சையான கருத்து பரவி வந்தது.
ஆம் பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ-என்ட்ரி கொடுத்த ஷெரினிடம் வந்து அசீம் காதலனை பார்க்க வரும்போது ஆணுறை கொண்டு வரவில்லையா? என்று கேட்டிருப்பதாகவும், அதில் 'க' என்கிற வார்த்தை மட்டும் கேட்பதாகவும் மற்ற வார்தைகளை பீப் செய்துவிட்டதாகவும் நெட்டிசன்கள் பலரும் காணொளியினை வெளியிட்டு பகிர்ந்து வந்தனர்.
இதற்கு ஷெரினிடம் இன்ஸ்டாகிராம் பயனரின், உங்களிடம் அசீம் ஆணுறை கொண்டு வந்தாயா என்று கேட்டாரா, அப்படியொரு செய்தி பரவி வருகிறது, எது உண்மையா? இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஷெரினா அளித்த விளக்கம், தன்னிடம் அசீம் சிகரெட் கொண்டுவரவில்லையாக என்று கேட்டதாகவும், அந்த இடத்தில் அவர் காதலி என்ற வார்த்தையை கூறியதால் தான் நான் எனது காதுகளை மூடியதாகவும், மற்றபடி தவறாக எதுவும் கேட்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விளக்கத்தினை அசீம் ரசிகர் ஒருவர் பிரிண்ட் ஷாட் எடுத்து அசீமிற்கு ஆதரவாக வைரலாக்கி வருகின்றார்.