நாளுக்கு நாள் அதிகரிக்கும் அசல் கோளாறின் அட்டகாசம்! ஜனனியை விட்டு வைக்காத கடுப்பேற்றும் காட்சி
பிக்பாஸ் வீட்டில் இலங்கை பெண் ஜனனியின் மீது கைவைத்த அசல் கோளாறின் அத்துமீறிய காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் ஜிபி முத்து சமீபத்தில் முதல் ஆளாக வெளியேறினார். பின்பு முதல் வார எவிக்ஷனில் சாந்தி மாஸ்டர் எவிக்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது 19 போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர்.

அசல் கோளாறின் அத்துமீறல்
இந்நிலையில் உள்ளே போட்டியாளராக சென்றுள்ள அசல் கோளாறு பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறி வருகின்றார். குயின்ஸி, மைனா, மகேஸ்வரி இவர்கள் அருகே அமர்ந்து கொண்டு அசல் செய்த செயல் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தது.
மேலும் நிவாஷினியுடன் மிகவும் நெருக்கமாக பழகி வரும் நிலையில் இருவரும் காதலிக்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்து வருகின்றது. இந்நிலையில் இலங்கை பெண் ஜனனியின் தோளில் கை வைத்த அசலை அவர் சட்டென்று முறைத்ததால் உடனே கையை எடுத்துள்ளார் அசல். இக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
I have defended #Asal everywhere in this 'touching females issue' alone.
— Thug Life Thalaivar (@mindmeldcreates) October 26, 2022
But J looks really uncomfortable & Asal takes off his hand like a pervert caught red handed.
Dei enna da panra, tharuthala tharuthala. Adum ivlo peru paakura show la?? #BiggBossTamil6 #BiggBossTamil https://t.co/oJWrMkRBnE