இன்ஸ்டா பதிவால் வசமாக சிக்கிய பிக்பாஸ் அர்ச்சனா! என்ன செய்தார் தெரியுமா?
பிரபல சின்னத்திரை நடிகையும், பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னருமான அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பதிவால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சீரியல் நடிகை அர்ச்சனா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடையில் வந்தாலும் மக்கள் மனங்களை தனது ஆளமையால் வென்று லைட்டிலை ஜெயித்தவர் தான் நடிகை அர்ச்சனா.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர் அதனை தொடர்ந்து பல பாடல்களில் நடித்து வந்தார்.
அதனை தொட்ந்து அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள டிமான்டி காலனி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அவர் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரும் பிக்பாஸ் 8 போட்டியாளருமான அருண் பிரசாத்தை காதலித்து வருவது அனைவரும் அறிந்தது தான்.இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர்.

நடிப்பில் மாத்திரமன்றி சமூக வளைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டிவரும் அர்ச்சனா தற்போது இன்ஸ்டாகிராம் பதிவால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். திருவண்ணாமலையில் பிரச்சித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலின் பின் புறம் உள்ள அண்ணாமலையார் மலை ஆன்மிக ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மலைப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த மலையில் ஏறுவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், அர்ச்சனாவனத்துறையிடம் அனுமதி பெறாமல், தடையை மீறி மலை உச்சி வரை சென்று வந்திருக்கிறார்.

அவர் மலை ஏறியது குறித்து வீடியோ ஒன்றையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து, அதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி, அனுமதியின்றி மலையேறிய குற்றத்திற்காக அர்ச்சனாவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |