Bigg Boss: மீண்டும் சாப்பாட்டுக்கு எழுந்த சண்டை.. கோபத்தில் சென்ற அன்ஷிதா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண்கள் அணியினர் செய்த தவறால் அன்ஷிதா சாப்பாட்டுக்கு சண்டையிட்டுக் கொண்டுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 20 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
முதல் வாரத்தில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா, சுனிதா என மொத்தம் 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரத்தில் சவுந்தர்யா, சிவகுமார், ராணவ், சத்யா, ஜெஃப்ரி, வர்ஷினி, தர்ஷிகா, மஞ்சுரி, ரியா, ஜாக்குலின், ரஞ்சித், தீபக், சாச்சனா என 13 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய மூன்றாவது ப்ரொமோ காட்சியில், சாப்பாடு விஷயத்தில் அன்ஷிதாவை மறந்துவிட்டு ஆண்கள் அணியினர் டிஷ் ஒன்றினை பங்கு பிரித்துள்ளனர்.
இதனால் தன்னை மறந்துவிட்டதைக் குறித்து அன்ஷி சண்டையிட்டுள்ளார். முத்துக்குமரன் தாங்கள் செய்த தவறை மறைப்பதற்கு சில தில்லுமுல்லு வேலைகள் செய்துள்ளார். அதனையும் ப்ரொமோ காட்சியில் காட்டப்பட்டுள்ளது..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |