நினைச்சது எல்லாத்தையும் இருக்கும் போதே செஞ்சிடுங்க.. அனிதா சம்பத் ரசிகர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்
" நினைச்சது எல்லாத்தையும் இருக்கும் போதே செஞ்சிடுங்க.. "என அனிதா சம்பத் உருக்கமாக பதிவிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரபல டிவியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக இருப்பவர் அனிதா சம்பத். தொடர்ந்து வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள்.
அது மட்டுமன்றி பலகோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
ஆனால் அதில் கடைசி வரை இருக்கவில்லை. இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய போது அவரின் தந்தை தவறிவிட்டார். இதனால் அனிதா சம்பத் மிகவும் மனமுடைந்து ஓய்வில் இருந்தார்.
அப்பாவிற்காக ஒரு சில நிமிடங்கள்..
இந்த நிலையில் தற்போது கணவருடன் இணைந்து தனியாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். ஆனாலும் தனது தந்தையின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாள் வரும் பொழுது உருக்கமான பதிவொன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஒரு சில ஆலோசனைகள் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் இந்த ஆண்டும் அப்பாவின் பிறந்த நாளுக்கு ஒரு பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “ பெற்றோர்கள் இருக்கும் போதே அவர்களை எங்கு அழைத்து செல்ல நினைக்கிறீர்களோ அங்கு அழைத்து செல்லுங்கள். அவர்களின் மருத்துவ செலவிற்காக பணம் சேர்த்து வையுங்கள். மரியாதை செலுத்துங்கள், உயிருடன் இருக்கும் போதே நீங்கள் நினைப்பவை அனைத்தும் நிறைவேற்றிக் கொள்ளுங்கள்...” என ரசிகர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |