Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிலிருந்து உள்ளே வந்திருக்கும் போட்டியாளர்களில் கனி மற்றும் சுபிக்ஷா ரெட் கார்டு குறித்து நாம் ஏன் கேள்வி கேட்கக்கூடாது என பேசிவருகின்றனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் முடிவிற்குவரும் சூழ்நிலையில், பொங்கல் கொண்டாட்டத்திற்காக போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் உள்ளே சென்றுள்ளனர்.
கடைசியாக 4 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இவர்களில் வெற்றியாளர் யாராக இருப்பார்? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.
இந்நிலையில் தற்போது சான்ட்ரா நடிப்பினால் கம்ருதின், பாரு ரெட் கார்டு பெற்று வெளியேறியதைக் குறித்து பழைய போட்டியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கனி, அரோரா, சுபிக்ஷா, விக்ரம் என 4 பேர் இருந்து பேசும் போது, இவர்கள் செய்தது நம்பக்கூடியதாவே இல்லை என்றும் நாம் ஏன் ரெட் கார்டு குறித்து கேள்வி கேட்கக்கூடாது? என்று கூறியுள்ளனர்.
இதில் அரோரா சான்ட்ரா வாய்திறந்து அவரே உண்மையைக் கூறினால் மட்டுமே இந்த உண்மை வெளியாகும் என்று கூறியுள்ளார்.
மேலும் சான்ட்ரா உள்ளே வந்த அமித்தை கட்டிப்பிடித்த போது அவர் அவரை தவிர்த்துள்ளதுடன், சரியாக பதில் அளிக்காமல் உதாசினப்படுத்தினார். இதனை பிரஜனும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
ஆக மொத்தம் சான்ட்ரா இந்த சீசனில் பெரும்பாலான போட்டியாளர்களின் வெறுப்பை சம்பாதித்த போட்டியாளராக இருக்கின்றார்.
இந்த வீட்டிலிருந்து ஒருவரை நண்பராக வெளியே கொண்டுசெல்வேன் என்ற கேள்விக்கு போட்டியாளர்கள் தங்களது கருத்துக்களைக் கூறி எமோஷனலாக அழுதுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |