பிக்பாஸ் அக்ஷராவிற்கு பையன் இருக்கின்றாரா? ஹோம் டூரில் உளறிய உண்மை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த அக்ஷரா தனது வீட்டை ஹோம் டூர் மூலமாக காட்டியுள்ள காணொளியை இங்கு காணலாம்.
அக்ஷரா
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்டு 80 நாட்கள் வரை உள்ளே இருந்து விளையாடி ரசிகர்களைக் கவர்ந்தார். பின்பு குறைந்த வாக்கு பெற்று வெளியே வந்தார்.
இந்த சீசனில் கலந்து கொண்ட தருணும், அக்ஷராவும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இவர்கள், நண்பர்களாகவே பழகி வருகின்றனர்.
பிக்பாஸ் முடிந்து வெளியே வந்த இவருக்கு இவருடைய அண்ணன் கார் ஒன்றினை பரிதாக அளித்திருந்தார். இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என்று கூறப்படுகின்றது.
மாடல் அழகியான அக்ஷரா, கடந்த 2018ம் ஆண்டு வெளியான காசு மேல காசு என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இந்நிலையில் அக்ஷரா தனது பிரம்மாண்ட வீட்டை ரசிகர்களுக்கு ஹோம் டூராக காட்டியுள்ளார். இதில் தனது பையன் என்று நாய் ஒன்றினைக் கூறியுள்ளார்.
அக்ஷராவின் வீட்டை அவதானித்த ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளதுடன், பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.