விரைவில் அமீர்- பாவனி திருமணம்? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அமீர் - பாவனி தங்களது திருமண திகதியை அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்கள்.
அமீர் - பாவனி
பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் பரவலாக அறியப்பட்ட ஜோடி தான் அமீர்-பாவனி.
பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்த அமீர், பாவனியிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிலே வைத்து அமீர் தனது காதலை பாவனியிடம் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
ஆனால் பாவனி ஆரம்பத்திலிருந்தே மறுத்துக்கொண்டே வந்தார்.
இதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து “பிபி ஜோடிகள்” சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் நடன ஜோடியாக பங்கேற்றி அதில் டைட்டிலை தட்டிச் சென்றனர்.
காதல்
இதனை அடுத்து பிபி ஜோடிகள் பின் பாவனி தனது இன்ஸ்டா பக்கத்தில் முதல் முறையாக நாம் இருவரும் நம்முடைய வாழ்க்கை பயணத்தை இணைந்து தொடங்கலாம். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன். அமீர், நீ இனிமேல் எப்போதும் என்னுடையவனாக இருப்பாயா.. ஐ லவ் யூ” என குறிப்பிட்டு பாவனி அமீரின் காதலுக்கு பச்சை கொடி காட்டினார்.
இதன்பின்னர் இருவரும் இணைந்து ஜோடியாக வலம் வருவதோடு பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டிகள் அளித்தும் வந்தனர். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தெரிவித்தனர்.
திருமணம்
இந்தநிலையில் அமீர் - பாவனி பெப்ரவரி மாதம் 15ம் திகதி திருமணம் செய்து கொள்ளப் போவதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.