இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் யார்?
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் மக்கள் வாக்கு குறைவாக பெற்ற போட்டியாளர் ஒருவர் வெளியேறப்போகிறார்.
பிக் பாஸ்
பிக் பாஸ் சிசன் 9 கடந்த அக். 5 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்சேதுபதி வித்தியாசமான முறையில் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த சீசனில் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் சமூக வலைதள நட்சத்திரங்கள் என மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் 4 வைல்டு கார்டு போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்கு கொண்டு வரப்பட்டனர்.
கடந்த வாரம் ரம்யா மற்றும் வியானா என இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர்.

சீசன் 9 கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. தற்போது வீட்டில் கனி, சபரி, பார்வதி, கமரூதின், விக்ரம், எஃப்.ஜே, ஆதிரை, சாண்ட்ரா, அமித், திவ்யா, சுபிக்ஷா, அரோரா, வினோத் ஆகியோர் உள்ளனர். வார இறுதியில் 11வது வாரத்திற்கான எவிக்ஷன் நடைபெற்றுள்ளது.
இந்த வாரத்திற்கான எவிக்ஷன் நாமினேஷன் லிஸ்டில்திவ்யா, அமித், சபரி, பார்வதி, சாண்ட்ரா, சுபிக்ஷா, அரோரா, எஃப்ஜே, ஆதிரை, கனி, கமரூதின் என மொத்தம் 11 போட்டியாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் மக்கள் வாக்குகள் படி அமித், சுபிக்ஷா, சபரி, சாண்ட்ரா ஆகியோர் குறைந்த வாக்குகளில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த 4 பேரில் ஒருவர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
டவுள் எவிக்ஷன் என்றால் கட்டாயம் இவர்களில் இருவர் வெளியேறலாம். இப்படி இருக்க ரசிகர்களின் கருத்துப்படி சாண்ட்ரா அல்லது எஃப்.ஜே இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் வெளியேறினால் நிகழ்ச்சி நன்றாக இருக்கும் எனப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |