பொதுவெளியில் பெண்ணை முறைதவறி பேசுவது தவறு! விஜய் சேதுபதியை விளாசிய பிரபலம்
நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு தலை பட்சமாக தொகுத்து வழங்குகிறார் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநுல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இவர் மக்களிடம் "எல்லாரிடமும் ரொம்பவும் மென்மையாக, கொஞ்சம்கூடக் கடிந்துகொள்ளாமல், கண்டிப்பு இல்லாமல் இருக்கிறார்" என்ற விமர்சனங்களை பெற்றார்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 8 ஐ விஜய் சேதுபதி தொகுத்து வழங்க களமிறங்கி உள்ளார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் விஜய் சேதுபதியின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து வியந்தவரும், பாராட்டியவரும் இன்று வெறுப்படையும் நிலைக்குச் சென்றிருக்கின்றனர்.
இவர் கொஞ்சம் கொஞ்சமாக கமல்ஹாசனை போல மாறி வருகிறார் என விமர்சிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் அருணுக்கும் மஞ்சரிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையை பற்றி பேசும்போது ஒருதலைபட்சமாக நடந்துகொண்டது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இதில் மஞ்சரியை அவர் குறிவைத்து பேசியது பற்றி இசையமைப்பாளரும், பிக் பாஸ் விமர்சகருமான ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய முகநுல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் விஜய் சேதுபதி ஆண்களை கண்டு அஞ்சுவதாகவும் ஆண்களை கேள்வி கேட்கிறன்ற விமர்சிக்கிறப் பெண்களை எப்படி ஆண்களெல்லாம் ஒன்றுசேர்ந்து கடுமையாக,தாக்குகிறார்களோ அதையே தொகுப்பாளரும் செய்கிறார் என விஜய் சேதுபதியை அவர் விமர்சித்துள்ளார்.
விஜய் சேதுபதி ஆண்கள் தவறு செய்தால் அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் பெண்களில் சிலரை மட்டும் குறிவைக்கிறார் என விமர்சிக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |