விஷால்- தர்ஷிகா உறவுக்கு முற்று- அவரே கூறிய வார்த்தை.. அப்போ இது காதல் இல்லையா?
பிக்பாஸ் தர்ஷிகா, விஷாலை காதலிக்கவில்லை என ஓபனாக நிகழ்ச்சியொன்றில் பேசிய காணொளி ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும், 'குக் வித் கோமாளி' மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
வாரத்தில் ஐந்து நாட்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியை மிஸ் பண்ணும் ரசிகர்கள் கூட, போட்டியாளர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டி அவர்களை வறுத்தெடுக்க தொகுப்பாளரை காண சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வந்து விடுவார்கள்.
கடந்த ஏழு சீசன்களாக, பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸை ஃப்ரை செய்து வந்த கமலஹாசன், எட்டாவது சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது அவருக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.
இந்த நிலையில், கமல்ஹாசனை காப்பி செய்யாத விதத்தில், விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தனி சிறப்பு எனலாம். அதேபோல் தனக்கே உரிய பாணியில் போட்டியாளர்களை விசாரிக்கிறார்.
இவர் போட்டியாளர்களிடம் கேட்கும் கேள்விகள், ரசிகர்கள் தரப்பில் கேட்க வேண்டும் என நினைக்கும் கேள்விகளாக உள்ளதால், விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருவதற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.
தர்ஷிகா விஷாலை காதலிக்கவில்லையா?
இப்படியொரு சமயத்தில் கடந்த சில வாரங்களாக பிக்பாஸ் வீட்டில் காதலர்களாக வலம் வந்த விஷால்- தர்ஷிகாவின் உறவிற்கு முடிவு வந்துள்ளது.
அவரே ஒரு நிகழ்ச்சியில் “நாங்கள் காதலர்கள் அல்ல, ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் விஷாலை பிடிக்கும். அதனை தாண்டி எதுவும் கேட்காதீர்கள்...” என பதில் கொடுத்துள்ளார்.
இதனை கேட்ட தொகுப்பாளர்,“ நீங்கள் காதல் செய்ததை பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள 100 கேமராக்களும் பார்த்தது..” என நக்கலாக பேசியுள்ளார்.
இந்த காணொளி ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளதுடன், பக்கத்தில் இருந்த சத்யா இவர்களின் காதல் கதை குறித்து ஓபனாக பேசுயது பற்றியும் கருத்துக்கள் எழுந்து வருகின்றது.
#Tharshika about #VJVishal in BB Unlimited 💥💥#VJVishal is crush, Pudikkum but love pannala 🤝#BiggBossTamil8 #BiggBoss8Tamil #BiggBossTamilSeason8 #BBMama
— BB Mama (@SriniMama1) December 23, 2024
pic.twitter.com/k08uPMQoBJ
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |