பிக் பாஸ் டாப் 5 போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் கொடுத்த பரிசு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கிராண்ட் ஃபினாலேயில் நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் டாப் 5 போட்டியாளர்களுக்கு பரிசு கொடுத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 106 நாட்கள் கடந்து இன்றுடன் முடிவடைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்ஷன், விசித்ரா, பூர்ணிமா என 18 பேர் வெளியேறியுள்ளனர்.
டாப் 5 போட்டியாளர்களாக அர்ச்சனா, மாயா, தினேஷ், விஷ்ணு, மணி சந்திரா என வந்துள்ளனர். இதில் அர்ச்சனா டைட்டில் வின்னரை வென்றுள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசன் டாப் 5 போட்டியாளர்களுக்கு தனது கையெழுத்து போட்ட புத்தகம் ஒன்றினை பரிசாக கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மினி பிக் பாஸ் வீட்டையும் ஒவ்வொருவருக்கும் கொடுத்து அசத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |