பிக்பாஸ் சீசன் 7 இப்படியொரு பிரச்சினையா? யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்..!
பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ளும் பெண் பிரபலங்கள் தொடர்பில் புது பிரச்சினையொன்று உருவாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், மீடியாத்துறையில் ஆர்வமான பிரபலங்கள் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள். இதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது.
இந்த நிலையில் கடந்து ஆறு சீசன்களை சிறப்பாக நிறைவு செய்த பிக்பாஸ் குடும்பம் தற்போது 7 வது சீசனை ஆரம்பிக்கவுள்ளது.
இதற்கான போட்டியாளர்கள் தெரிவுகள் முடிந்து விட்டது என பிரபல தொலைக்காட்சி போஸ்ட்டரையும் வெளியிட்டு விட்டது.
கலந்துக் கொள்ள மறுக்கும் பிரபலங்கள்
ஆனால் பிக்பாஸில் கலந்து கொண்டு சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு இது சரியான தீர்வாக இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா, லாஸ்லியா, சனம் ஷெட்டி உள்ளிட்டோர் வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாமும் மற்றவர்கள் போல் ட்ரோல் செய்யப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் கலந்துக் கொள்ள மறுகிறார்களாம்.
இதனால் போட்டியாளர்களின் பங்கேற்பு குறைவாக இருக்கின்றது என அந்தகவல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி பிக்பாஸை எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |