நாயை வைத்து ஜோவிகாவை கிண்டலடித்தாரா? புலம்பும் பிரதீப்பின் அடுத்த பதிவு
பிரதீப் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நாயின் புகைப்படத்தை பதிவேற்றி அதில் ஜோ ஜோ என்று குறிப்பிட்டுள்ளார்.
இது ஜோவிகாவை மறைமுகமாக கிண்டலடிப்பது போல் இருக்கிறது என நெட்டிசன்கள் தெரிவிக்க கடுப்பாகியுள்ளார்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜோவிகா வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக் பாஸ் ஆரம்பித்த வாரத்தில் கல்வி தொடர்பான வாதத்தில் சர்ச்சையை தொடங்கி, தற்போது மாயாவுடன் சேர்ந்து சண்டை போட்டுக்கொண்டு இருப்பதால் பலராலும் ஜோவிகா வெறுக்கப்பட்டார்.
இதன் காரணமாக குறைவாக வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஏற்கனவே வெளியேறிய பிரதீப் ஆண்டனி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதாவது ஒரு நாயின் புகைப்படத்தை பகிர்ந்து, அதற்கு 'ஜோஜோ' என்று குறிப்பிட்டு ட்விட்டர் பக்கத்தில் பதிவிறக்கம் செய்துள்ளார்.
Jojo ? pic.twitter.com/Zkc47hr6sV
— Pradeep Antony (@TheDhaadiBoy) December 1, 2023
இது அவர் ஜோவிகாவை தான் மறைமுகமாக கிண்டல் செய்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
வீட்டிற்குள் ஒன்றாக இருக்கும் போது இருவருக்கு இடையிலும் பல சண்டைகள் ஏற்பட்டுள்ளன.
ஆனால் அதை எதையும் பெரிதாக எடுக்கவில்லை என பிரதீப் ஆண்டனி நடிகை வனிதாவிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இவர் இப்படி ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருப்பது ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேலும் இந்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் விதமாக பிரதீப் ஆண்டனி, 'ஒரு நாய் போட்டோ கூட நிம்மதியா போடவிட மாட்டேங்கிறாங்களே' என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Oru nai photo kooda nimmathiya poda vida matreengale ? pic.twitter.com/8qiRgrqES1
— Pradeep Antony (@TheDhaadiBoy) December 1, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |