Simple-ஆக நடந்து முடிந்த திருமணம்- பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி மனைவியுடன் எப்படி இருக்காரு பாருங்க
பிக்பாஸ் பிரதீப் ஆண்டனியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரதீப் ஆண்டனி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்டவர் தான் பிரதீப் ஆண்டனி.
இந்த நிகழ்ச்சியில் பிரதீப் மீது பெண்கள் இருக்கும் இடங்களில் மோசமாக நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டை விசாரிக்காமல் பெண்களுக்கு ஆதரவு கொடுத்து தொகுப்பாளர் கமல்ஹாசன் எடுத்த முடிவால் சமூக வலைத்தளங்களில் அவர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார்.
திருமண புகைப்படங்கள்
பிக்பாஸ் வீட்டில் பறந்த கடிதங்கள்.. Wild card போட்டியாளரை கடிந்து எழுதிய பிரபலம்- வெடிக்கும் சர்ச்சை
இந்த நிலையில், பிரதீப் ஆண்டனிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்தது.
இதற்கிடையில், தன்னுடைய நீண்ட நாள் காதலியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதீப் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து, மிகவும் எளிமையான முறையில் சர்ச்சில் திருமணம் நடந்து முடிந்த புகைப்படங்களை பிரதீப் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பே இந்த பெண்ணை காதலித்து வந்தார் என்றும், அவர் பெயர் பூஜா என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
பிரதீப்- பூஜா தம்பதிகளின் திருமண புகைப்படங்கள் அவருடைய ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |