ஆட்டம் பாட்டத்தால் கலைகட்டிய பிக்பாஸ் இல்லம்...இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி
இதுவரையில் பிக்பாஸில் இடம்பெறாத வகையில் போட்டியாளர்களின் முடிவில்லாத பொழுதுபோக்கு அம்சங்களுடன் பிக்பாஸ் வீட்டில் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமர்சையாக இடம்பெற்றுள்ளது.
பிக் பாஸ்
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து இருப்பது பிக்பாஸ் தான்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரைக்கும் இந்த சீசன் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இப்போது 7வது சீசன் வெற்றி நடைபோடுகின்றது.
கடந்த 6 பிக்பாஸ் சீசன்களை விட, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாகவும், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமலும் ஒளிபரப்பாகி வருகின்றது.
தற்போது 91 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரவீனா, மணி சந்திரா, மாயா, தினேஷ், நிக்ஷன், விஷ்ணு என 6 பேர் நாமினேட் ஆகியிருந்தனர். இதில் ரவீனா மற்றும் நிக்ஷன் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |