மற்றவர் மேரேஜ்க்கு கவுன்சிலர் ஆகாதீங்க.... விசித்ராவை வெளுத்து வாங்கிய ஆண்டவர்
சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் தினேஷ் குறித்து பிக்பாஸ் வீட்டில் விசித்திரா பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.
இதற்கு ஆண்டவர் என்ன பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் மற்றவர் பர்சனல் விடயத்தில் தலையிட கூடாது என விசித்ராவை ஆண்டவர் எச்சரித்துள்ளார்.
பிக் பாஸ்
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து இருப்பது பிக்பாஸ் தான்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரைக்கும் இந்த சீசன் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இப்போது 7வது சீசன் வெற்றி நடைபோடுகின்றது.
கடந்த 6 பிக்பாஸ் சீசன்களை விட, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாகவும், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமலும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தற்போது 85நாட்களை கடந்து செல்கின்றது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம் என 14 பேர் வெளியேறியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |