கோலாகலமாக அறங்கேறவுள்ள பிக்பாஸ் கிராண்ட் பினாலே... வெற்றியாளராக முடிசூடபோவது யார்?
போட்டியாளர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் இன்று மாலை 6 மணிக்கு அறங்கேறவுள்ளது பிக்பாஸ் கிராண்ட் பினாலே.
கடந்த 104 நாட்களாக பிக் பாஸ் இல்லத்திற்குள் போட்டியிட்டவர்களில், 5 பேர் இறுதி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வெற்றியாளராக இன்று முடிசூடவுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7
பிரபல தொலைக்காட்சியில் தமிழில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 104 நாட்களை கடந்து இன்று இறுதி கட்டத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளது.
18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த பிக்பாஸ் நிழல்ச்சின் இறுதி வாரத்தில் அர்ச்சனா, மணிச்சந்திரா, மாயா, தினேஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் ஒருவர் வெற்றியாளராக கமல்ஹாசன் முன்னிலையில் அறிவிக்கப்படுவார்.
அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில் இன்று மாலை 6 மணி முதல் கிராண்ட் பினாலே கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றதும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
இன்று மாலை 6 மணியளவில் கொண்டாட்டங்களுடன் தொடங்கும் பிக் பாஸ் போட்டியின் இறுதி நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். கொண்டாட்டங்களின் நிறைவாக வெற்றியாளரும் அறிவிக்கப்படுவார்.
பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் யார்?
அந்த வகையில் இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் வாக்குகளின் அடிப்படையில் அதிரடியான மாற்றம் நடைபெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆக அர்ச்சனா தேர்வாகி இருப்பதாகவும் அவரை தொடர்ந்து ரன்னராக மணி தேர்வாகி இருப்பதாகவும் மூன்றாவது இடத்தில் மாயா இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |