105 நாட்களுக்கு மேல் இருந்த 3 போட்டியாளர்களின் முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களாக பைனலுக்கு சென்ற விக்ரமன், ஷிவின் மற்றும் அசீம் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 6
விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 9ஆம் திகதி தொடங்கியது.
இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6-வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் கதிரவன் பணப்பெட்டி டாஸ்க்கில் 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.
இவரைத் தொடர்ந்து 11,75,000 பணத்தை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியேறினார்.
21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட போட்டியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் சென்றனர்.
சம்பளம்
நேற்றைய தினம் இறுதிபோட்டியில் அசிம் வெற்றிக்கிண்ணத்தை தட்டிதூக்கினார்.
இந்தநிலையில் விக்ரமன், ஷிவின் மற்றும் அசீம் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி ஒரு நாளைக்கு ரூ. 18 ஆயிரம் என் பேசப்பட்டு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. 105 நாட்கள் கணக்கு வைத்து பார்த்தால் அவருக்கு ரூ. 18 லட்சம் சம்பளம் கிடைத்திருப்பதாக தெரிகிறது.
அசீம் ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் பேசப்பட்டு 105 நாட்களுக்கு ரூ. 25 லட்சம் வாங்கியிருப்பதாக தெரிகிறது. ஷிவினும் இதே சம்பளத்திற்கு ஒப்புக்கொண்டு தான் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் என்று கூறப்படுகின்றது.