Bigg Boss: நாமினேஷன் ஃப்ரி பாஸை தட்டித் தூக்கிய பெண்கள்... காப்பாற்றப்படுவது யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரமும் பெண்கள் நாமினேஷன் ஃப்ரீ பாஸை வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த வாரம் காப்பாற்றப்படுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
மூன்று வாரங்கள் நிறைவறைந்த நிலையில், கடைசியாக தர்ஷா வெளியேறியுள்ளார். இந்த வாரத்திற்கு 9 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சீசனில் புதிய சலுகையை பிக் பாஸ் வழங்கியுள்ளது. அதாவது டாஸ்க் ஒன்றினை வைத்து அதில் வெற்றி பெறும் அணிக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் ஒன்றினை கொடுத்து வருகின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களாக பெண்கள் அணியினரையே வெற்றி பெற்ற நிலையில், இந்த வாரமும் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இந்த வாரம் பெண்கள் அணியில் எந்த போட்டியாளர் காப்பாற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |