Bigg Boss: 4 பைனல் போட்டியாளர்களில் இன்று வெளியேறியது யார்?
பிக் பாஸ் வீட்டில் இறுதியாக 4 பைனல் போட்டியாளர்கள் இருந்த நிலையில் விக்கல்ஸ் விக்ரம் இன்று வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸில் பின்பு 4 போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரி கொடுத்தனர்.
இதில் 20 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் வி்க்ரம், சபரி, அரோரா, திவ்யா என நான்கு பேர் மட்டுமே உள்ளனர். கடந்த தினங்களில் பொங்கல் கொண்டாட்டத்திற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்கள் இன்று வெளியேறியுள்ளனர்.

இந்த சீசனில் பரபரப்பாக பேசப்பட்ட விடயம் என்னவெனில் பார்வதி, கம்ருதின் இருவரும் ரெட் கார்டு வாங்கியது தான். வெளியே செல்லும் போட்டியாளர்களுக்கு தனது வார்த்தையால் பிக்பாஸ் வழியனுப்பி வைத்துள்ளது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
மேலும் இன்று இரவுடன் ஜியோ ஹாட்ஸ்டார் 24 மணி நேர சேவையும் நிறுத்தப்படுவதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார். நாளைய தினம் கிராண்ட் பினாலே என்பதால் போட்டியாளர் தங்களை அழகுபடுத்திக் கொள்ள அழகு கலைஞர்கள் உள்ளே வந்து அவர்களை அழகு படுத்தியுள்ளனர்.
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள்
இன்று திவ்யா, சபரி, அரோரா இவர்களின் பயண காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளே இருக்கும் நான்கு பைனலிஸ்டில் விக்ரம் வினோத் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் வினோத் டைட்டில் வின்னராக வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த தருணத்தில் இந்த தகவல் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |