Bigg Boss: மூச்சு விட முடியாமல் மோசமான நிலையில் சுபிக்ஷா... பிக்பாஸ் திட்டியது காரணமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுபிக்ஷா பேனிக் அட்டாக் ஏற்பட்டு மூச்சுவிட முடியாமல் திணறிய சம்பவம் பிக்பாஸில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் காணப்படுகின்றனர். இதில் விக்ரம், வினோத் இருவரையும் தவிர மற்ற 11 போட்டியாளர்கள் இந்த வார நாமினேஷனில் இருக்கின்றனர்.
இந்த வாரம் வீட்டின் தலைவராக வினோத் இருந்து வரும் நிலையில், பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றினைக் கொடுத்துள்ளார். இந்த டாஸ்கில் பார்வதி, கம்ருதின் இருந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் கண்டித்ததால் சுபிக்ஷாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சுபிக்ஷா விளையாட்டு ஒன்றினை விட்டுக் கொடுத்துவிட்டதாகவும், தன்னுடைய விளையாட்டில் மாற்றம் ஏற்பட்டதாக நினைத்து குழப்பத்தில் இருந்தார்.
அத்தருணத்தில் விக்ரம் உனக்கு வேண்டியதை நீ போராடி வாங்கு... என்று கூறினார். இதனை நினைத்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சுபிக்ஷா திடீரென உடைமாற்றும் அறைக்கு சென்று அழ தொடங்கியுள்ளார்.

அவரை சமாதானப்படுத்துவதற்கு விக்ரம் உள்ளே சென்ற நிலையில், சிறிது நேரம் கழித்து விக்ரம், சுபிக்ஷா இருவரையும் வெளியே அழைத்துள்ளார்.
மேலும் வினோதை அழைத்து உடைமாற்றும் அறைக்குள் இரண்டு பேர் சென்றால் அந்த திரையை தூக்கிவிட்டுருங்க என்று கூறினார்.

பிக்பாஸ் கூறிய விதம் தவறாக தோன்றியதால் சுபிக்ஷா கதறியழுத நிலையில், அவருக்கு பேனிக் அட்டாக் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
தற்போது மருத்துவ அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுபிக்ஷாவை நினைத்து விக்ரம் கதறி அழுதுள்ளார்.


| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |